கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதல்வர்..!
முதலமைச்சர் தனது சொந்த கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். தமிழர் திருநாளை கொண்டாட சேலம் சென்ற முதலமைச்சர் சொந்த கிராமமான சிலுவைபாளையத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இதனையடுத்து எடப்பாடி எடப்பாடி குடியிருப்பு பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் முதலமைச்சர் அவர்களுடன் விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் மக்களோடு மக்களாக பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு விழாவை கொண்டாடியுள்ளார்.
பின்னர் சப்பணிபட்டி பகுதி குழந்தைகள் மற்ற பெண்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மக்களுடன் அமர்ந்து அன்னதானம் உறவு கொண்டுள்ளார்.







