சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!
சிக்கன் பக்கோடா சென்டரில் கோழி கால் வாங்கி சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், கனகவல்லி தம்பதியினரின் குழந்தைகள் சிக்கன் பக்கோடா சென்டரில் வாங்கிய கோழிகளை சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தைகளை உடனடியாக திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தைகளை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிக்கன் சென்டரில் கோழிகளை வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.






