சென்னை ஆட்சியரை, சேலம் மாவட்ட ஆட்சியர் என்ற அமைச்சர்! தூங்கி வழிந்த சமூகப் பாதுகாப்புத் துறை ஆணையர்
சென்னையில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். சாலிகிராமத்தில் நடைபெற்ற பெண் குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்பு தொகையை வழங்கினார்.

அதையடுத்து நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியை சேலம் மாவட்ட ஆட்சியர் என குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சமூகப் பாதுகாப்புத் துறை ஆணையர் தூங்கிய நிகழ்வும் அரங்கேறியது.





