சென்னை கலைஞர் வி.பன்னீர்செல்வத்திற்கு ஷில்ப் குரு விருது..!
சென்னையை சேர்ந்த கலைஞர் வி.பன்னீர் செல்வதற்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஷில்ப் குரு விருது வழங்கப்பட்டது. தஞ்சை ஓவியத்திற்காக இந்த கௌரவம் அவருக்கு கிடைத்துள்ளது.
தலை சிறந்த கைவினை கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் ஷில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் மூன்று ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன.
இந்த நிலையில் அந்த விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்.





