--- --:--:-- --

பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரங்கள் கோவை, சென்னை..!முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்!!!

gs

சேலம் செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை நகரங்கள் விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும்,அம்மா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,தமிழகத்தில் சிறுபான்மையின மக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும்,திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக இஸ்லாமிய மக்களை தூண்டி விட்டு போராட்டத்தை நடத்த வைக்கிறார்கள். அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள் எனவும் பேசினார்.

 

மேலும்,திமுக 10 ஆண்டுகளுக்கு முன் வைத்த கடனுக்கு அரசு தற்போது வரை தொடர்ந்து வட்டி கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் தான் இருக்கிறார் எனவும், அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும்,நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

 

மேலும்,கே.சி. பழனிச்சாமி அதிமுக வில் இல்லை. அவர் பல முறை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறை சென்றுள்ளதாகவும்,விவசாயிகளின் நலன் கருதியும், பருவ மழையை சேமிக்கவுமே குடிமராத்துப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.மக்களிடையே வெற்றித் திட்டமாக உள்ளதாகவும் பேசினார்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்கு அமைச்சரவையில் இருந்து கவர்னருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,திமுக ஆட்சியில் தான் நளினியை மட்டும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

ஊடகத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக எந்த ஊடகமும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon