கோயில் திருவிழாவில் கவிழ்ந்து விழுந்த தேர்..!
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பழனி ஊரில் நடைபெற்ற திருவிழாவில் மகா காளியம்மன் கோயில் தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மகா காளியம்மன் தேர் திருவிழா 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று தேரை பக்தர்கள் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் ஒரு சக்கரம் கால்வாய்க்குள் இறங்கியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஜேசிபி கிரேன் மூலம் தேரை எடுத்துள்ளனர்.






