மீண்டும் பாலிவுட் பக்கம் தனுஷ்! கன்னத்தில் முத்தம்!
பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலிகானின் கன்னத்தில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி இன்றைய பேசுபொருள் ஆகியுள்ளார் தனுஷ்.
தமிழில் வெற்றி நடை போட்டுக் கொண்டே பாலிவுட், ஹாலிவுட்டிலும் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் பாலிவுட் கதாநாயகனாக ரஞ்சனா படத்தில் அறிமுகப்படுத்திய ஆனந் ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தயாராகி உள்ளார்.
அசுரன் வெற்றியோடு புத்துணர்ச்சியோடு இருக்கும் தனுஷ் கார்த்தி சுப்புராஜ் சுருளி, மாரி செல்வராஜின் கர்ணன் என தமிழில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தாலும் தேடி வந்த பாலிவுட் வாய்ப்பை தட்டி கழிக்காமல் அதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் இளசுகளை கிறங்கடித்து இளம் வயதிலேயே பல ரசிகர்களைக் கவர்ந்தவரான அலி கானுடன் நடிப்பில் கைகோர்த்துள்ள தனுஷ் முதன்முறையாக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அக்ஷய் குமாருடன் இணைந்து பகிர்ந்து அந்த படத்தை பிரம்மாண்ட படைப்பாக இருக்கிறார்.

ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் நேரடி பாலிவுட் சினிமாவில் நடித்து பட்டையைக் கிளப்பிய நிலையில் தற்போது தனுஷூம் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். தமிழில் எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்று மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவது சினிமாவில் தனுஷின் புகழை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே செல்வராகவன், வெற்றி மாறன் உள்ளிட்டோர் படங்களில் நடித்தும் முழு நடிப்பு திறனை வெளிக் கொண்டு வந்துள்ள தனுஷ் தொடர்ந்து கமர்ஷியலலிலும் கலக்கி வருகிறார். தமிழில் நல்ல கதை, கமர்சியல் வெற்றி படங்கள் கொடுக்க அவ்வப்போது மற்றும் வேறு மொழிப் படங்களிலும் நடிப்பது என்ற பார்முலாவை உருவாக்கியதிலும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.






