உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவியேற்பு..!
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லலித்தின் பதவிக்காலம் நேற்றோடு நிறைவடைந்தது.
இந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி மூலமும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவி ஏற்க உள்ளார். அவர் 2013 ஆம் ஆண்டு அலகாபாத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் சந்திர சூட் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





