முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை தகவல் கடிதம் அனுப்பியுள்ளது.
முல்லை பெரியாறு அணை முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமடையால் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்துள்ளது. இந்த மட்டத்திற்கு தண்ணீர் வந்து விட்டால் கேரளாவிற்கு திறக்கப்படும் 13 மதகுகளுக்கு தண்ணீர் சென்றடையும்.
இதன் காரணமாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல் எச்சரிக்கை தகவல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பருவமழை வரத்தால் எந்த நேரத்திலும் கேரளாவில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் இடுக்கி அணை வரையிலான நீரோட்ட பாதைகளில் வசிப்போர் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க இடுக்கி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





