மாடலிங் வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணின் ஆபாச படத்தை பெற்று மிரட்டிய நபர்..!
மாடலிங் வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணின் ஆபாச படத்தை பெற்று மூன்று லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வாட்ஸப்பில் வந்த விளம்பரத்தை வைத்து தொடர்பு கொண்டு உள்ளார்.
இங்கிலாந்து நாட்டிற்கு மாடலிங் வேலை தருவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் புகைப்படத்தை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி அந்த பெண் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது அந்த நபர் கேட்டபடி தனது கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
இந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக கூறி பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை கேட்டு மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.





