--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!

22

ளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி , திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon