மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் தென்கொரியா முதலிடம்..!
மொபைல் இணையதள வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது. இது குறித்து 138 நாடுகளில் ஊக்லா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் மொபைல் இணையதள வேகம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் சராசரி பதிவிறக்க வேகம் வினாடிக்கு 35.26 மெகா பிட்கள் ஆக உள்ள நிலையில் இந்தியாவில் வினாடிக்கு 12 மெகா பிட்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வினாடிக்கு 121 மெகா பிட் பதிவிறக்க வேகத்துடன் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது.






