--- --:--:-- --

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

7

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வரும் 6ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும், வட, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு வடக்கு, வடகிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் வரும் 6-ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon