--- --:--:-- --

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

11

மிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

பிற மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் பகல் நேர வெப்பநிலை சுமார் மூன்று டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

 

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை77 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon