கொரொனா பரவல் காரணமாக ஹோலி பண்டிகைகளுக்கு தடை..!
கொரொனா இரண்டாவது அலை காரணமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளன.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த மதரீதியான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மாநில அரசுகள் கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து டெல்லி, ஹரியானா மாநிலங்கள் ஹோலிப் பண்டிகைபொது இடங்களில் கொண்டாட அந்த மாநில அரசு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே தடையை தளர்த்த வேண்டும் என்றும் டெல்லி ஹரியானா வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






