--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

12

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வட தமிழகத்தில் தரைக்காற்று பலமாகவும் இடையிடையே சூறை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா, வடக்கு வங்கக்கடல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon