--- --:--:-- --

குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கொரொனா..!

13

துரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமயநல்லூரில் உள்ள சந்திரன் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.

 

இந்தநிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டதையடுத்து காப்பகத்தில் உள்ள ஆறு வயதுக்கு உட்பட்ட 27 சிறுமிகள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

 

இதில் பத்து சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon