--- --:--:-- --

தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு..!

2

மிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன்காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவுகள் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்றுடன் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon