மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





