--- --:--:-- --

இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

5

ளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களிலும் காரைக்குடியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

 

இதனால் நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon