--- --:--:-- --

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

6

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், புதுவை, காரைக்கால் மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் குலச்சல் முதல் தனுஷ்கோடி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon