--- --:--:-- --

10 லட்சம் கொடுத்தால் 2 கோடி தருவதாக போலி நோட்டுக்கள் கொடுத்து மோசடி..!

5

போலி ரூபாய் நோட்டு மோசடியில் சிறையில் இருக்கும் அவிநாசி ஆச்சர்யா மீது மேலும் ஒரு மோசடி புகார் எழுந்துள்ளது. திண்டிவனம் அடுத்துள்ள என்டியூறை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் பிரபாகர் என்பவர் புகார் அளித்தவர். கடன் கொடுப்பதாக செய்தித்தாளில் ஆச்சாரியா கொடுத்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் மூன்று கோடி ரூபாய் கடன் கேட்டு உள்ளார் பிரபாகரன்.

 

ஆவண கட்டணமாக 10 லட்சம் ரூபாய் தருமாறு ஆச்சாரியா நிபந்தனை விதித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 10 லட்சம் ரூபாய் கொடுத்து முதல் கட்டமாக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த பிறகு ஆச்சார்யா கொடுத்த 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலி என தெரியவந்துள்ளது.

 

கோடிக்கணக்கில் கடன் தருவதாகக் கூறி அவனை தொகையாக லட்சக்கணக்கில் பணம் வாங்கிகொண்டு போலி நோட்டுக்களை கொடுத்து ஆச்சாரியா மோசடி செய்து வந்துள்ளார். இவரது வலையில் சிக்கி ஏமாந்து ஜெனிபர் என்பவர் கொடுத்த புகாரின் ஆச்சாரியாவை கைது செய்துள்ளனர்.

 

இந்த செய்தியை பார்த்த பிறகே ஆச்சார்யா மீது பிரபாகரன் புகார் அளித்துள்ளார். ஆச்சார்யாவின் மோசடி வழக்கில் இரையானவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon