--- --:--:-- --

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

9.1

மிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறைந்து பனிப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் வறண்ட காற்று வீசும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

 

அந்த வகையில் கடந்த 4 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக பகுதியில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .

 

 

பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்றும் பனிப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் வறண்ட காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon