23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 23 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





