--- --:--:-- --

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..!

3

மிழ்நாடு முழுவதும் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon