தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக் கடல் வடக்கு, அந்தமான் கடற்பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






