--- --:--:-- --

வியட்நாம் படகு விபத்து : சென்னை வந்த இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

01

வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களில் இரண்டு பேரின் உடல்கள் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பிரபல செல்பொன் நிறுவனமான லாவா, தென்னிந்தியாவின் சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஊக்குவிக்கும் வகையில் வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றது.

 

 

சுற்றுலா சென்ற 108 இந்தியர்கள் அந்நாட்டின் ஃபூ குவோக் தீவு பகுதியில் உள்ள கடலில் படகு சவாரியில் ஈடுபட்டனர். இதில், 32 பேருடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மேற்கொண்டது.

 

 

இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு அதிகாரி சந்தோஷ் ஹதிமானி வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தன. அங்கிருந்து 10 தமிழர்களின் உடல்களை விமானம் மூலம் தமிழகம் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டன.

 

விமான நிலையத்தில் அவர்களது உடல்களுக்கு அரசு சார்பில் அயலகத் தமிழர் நல வாரிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணனும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரது உடல்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon