மத்திய அரசின் அணுகனிம திட்டம்..குமரி மக்கள் மனித சங்கிலி போராட்டம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ள முயலும் ஆலையை மூட வலியுறுத்தி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ள முயலும் ஆலையை கண்டித்து மக்கள்தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மணல் ஆலையை உடனடியாக மூடக்கோரி இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் கிராமத்துறையில் விழிப்புணர்வு கூட்டமும் மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது. இதில் கோரிக்கை பதாகையுடன் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.






