--- --:--:-- --

பெங்களூருவை அதிர வைத்த பெண் கொடூர கொலை..!

7

பெங்களூருவை அதிரவைத்த பெண் கொலையில் தொடர்புடையவர் இருசக்கர வாகனத்திலேயே ஒடிசாவுக்கு தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

 

பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமியின் உடல் பாகங்கள் 59 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் குளிர்பதன பெட்டியில் இருந்து கடந்த 21 ஆம் தேதி மீட்கப்பட்டது. தொடர் விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த முத்து ரஞ்சி என்பவர் இந்த கொலையின் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

 

தனிப்படை ஒடிசா விரைய அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கொலையில் ஈடுபட்டதாக கடைசியாக அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் மகாலட்சுமியை கொன்றுவிட்டு அருகில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்று இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஒடிஷா சென்றுள்ளார். சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவில் இருசக்கர வாகனத்திலேயே அவர் கடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon