வெட்டுக்கிளிகளை அழிக்க களமிறங்கியுள்ள மத்திய அரசு!
விளைநிலங்களில் படையெடுத்து பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கைகளை ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மத்திய அரசே நேரடியாக களம் இறங்கியுள்ளது. ராஜஸ்தானில் முதன்முறையாக தாக்குதலை தொடங்கிய வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விட்டுவைக்கவில்லை.
பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் இவை வயல்வெளிகளில் பயிர்களைத் முற்றிலுமாக அழித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிவேகத்தில் முன்னேறிவரும் வெட்டுக்கிளிகளை அளிக்க முதற்கட்டமாக ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு நேரடியாக களம் இறங்கியுள்ளது.
89 தீயணைப்பு வாகனங்கள், 170 ஆய்வு வாகனங்கள் மற்றும் ஸ்பிரேயர்களைக் கொண்ட தனித்துவமான 47 வாகனங்கள், 810 டிராக்டர்கள் என முழு வேகத்தில் களம் இறக்கப்பட்டுள்ளன. இதனிடைய டெல்லி, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் பழ தோட்டங்களில் மருந்துகளைத் தெளிக்க மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.







