விமானியின் சிகரெட்டால் விபத்துக்குள்ளான விமானம்
சிகரெட் புகைப்பதால் விமானம் விபத்துக்குள்ளான தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ஏர்பஸ் விமானம் ஒன்று பாரிஸிலிருந்து கைரோ நோக்கி சென்றுகொண்டிருந்தது. 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென்று காணாமல் போனது.
இந்த விபத்தில் 40எகிப்தியர்கள், 15 பிரெஞ்ச் நாட்டினர், அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், போர்ச்சுக்கல், சவுதி அரேபியா, சூடான் நாடுகளை சேர்ந்த பயணிகள் பலியானார்கள். அந்த விமானம் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில் விபத்து நடந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் விபத்துக்கான உண்மையான காரணம் இதுதான் என பிரஞ்ச் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர்களின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.





