மருத்துவ கல்லூரி விடுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி..!
தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் விடுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சாம்ராஜ் நகர் பகுதியில் கர்நாடக மாநிலம் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
அங்கு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை மாணவர் விடுதிக்குள் அங்குமிங்கும் நடமாடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.







