--- --:--:-- --

சவுரவ் கங்குலி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்..!

8

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி கடந்த 2ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் சீர் அடைந்ததை அடுத்து அவர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

 

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிய சவுரவ் கங்குலிக்கு கிரிக்கெட் வீரர்கள் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon