கொடைக்கானலில் 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு..!
கொடைக்கானலில் சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கு நட்சத்திர ஏரியைச் சுற்றி 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது பாட்டில் போன்ற குப்பைகளை ஏரியில் வீசுவோரை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டிற்கு வரும்.





