சாதிவாரி கணக்கெடுப்பு – அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு..!
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
பாட்னாவில் காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளிடம் பேசிய நிதிஷ்குமார் பீகாரில் உள்ள அனைத்து கட்சிகள் அளித்த ஒத்துழைப்பின் பேரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிவுகளை வெளியிடுவது சாத்தியமானதாக கூறினார்.
இன்று மாலை மாநிலத்தில் உள்ள 9 கட்சிகளுடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சாதி மாறி கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து கட்சிகளும் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பின் போது மக்களின் பொருளாதார நிலை குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டதாகவும் அனைத்து கட்சி கூட்டத்தின் போது அந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





