--- --:--:-- --

வாகனச் சோதனையில் சிக்கிய ரூ.1.50 கோடி… திருப்பூரில் பரபரப்பு!

currency

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது; எனினும் ஆய்வில் அது வங்கிப் பணம் என்று தெரிய வந்ததால், ஒப்படைக்கப்பட்டது.

 

வரும் 6ம் தேதி நடக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பணப்பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில்,
திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில், போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிவேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, வேனில் இருந்து, கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து, பணத்தை வேனுடன் பறிமுதல் போலீசார், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து, தாசில்தார் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

 

இதில், வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. அவ்வகையில் ரூ.1 கோடியே 50 லட்சம் கொண்டு வரப்பட்டதாக, வேன் டிரைவர் பிரபாகரன் கூறினார். அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர். ஆவணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணம் சரியாக இருந்ததால் பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் வேனில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Right Menu Icon