--- --:--:-- --

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன..!

5.`

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் மீது உத்தரபிரதேச போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹத்ராஸ் இல்லாமல் தடுக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியையும் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

அவர்கள் காவல் துறையினர் பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை. முகக்கவசம் அணிய வில்லை என பெரு தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மீது உத்திரப்பிரதேச போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

 

 

சட்டப் பிரிவுகள் 188, 269, 270 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கிடையே ராகுல், பிரியங்கா ஆகியோர் தடுக்கப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உரிய பதிலை தாக்கல் செய்யும்படி உத்திரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon