--- --:--:-- --

குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செவிலியர் மீது வழக்கு பதிவு..!

2

ஞ்சையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுப் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் மற்றும் பிரியதர்ஷினி தம்பதி கடந்த 25ஆம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் உடல் நலக் குறைவு காரணமாக உடலில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

 

இதனையடுத்து குழந்தையின் கையிலிருந்து ஊசி அகற்றும்போது செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக செவிலியர் மீது 338 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon