கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்துள்ளார். யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவரது வீட்டின் ஒரு அறையில் கட்டு கட்டாக எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்டது. அதன்பின் அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.