மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்குப்பதிவு.!
புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோகித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் துத்திப்பட்டு கிராமத்தில் கிரிக்கெட் கிளப் செயல்பட்டு வருகிறது.
அங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து சீரமைக்கப்பட்டதையடுத்து புதுச்சேரி முத்திரைபாளையம் இளங்கோ மைதானத்தில் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பள்ளி மைதானத்தில் பயிற்சி நடைபெற்ற பொழுது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த சிறுமி புகார் அளித்தும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்ததையடுத்து குழந்தைகள் நலக்குழு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், கிளப் தலைவர் தாமோதரன், கேப்டன் ரோகித் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் கேப்டன் இயக்குனர் ஷங்கரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.






