நடிகை ஸ்ரீலீலா எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
கன்னடத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இதை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி தந்த இவர், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபலமானார். நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்குத்தான் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இந்திய அளவில் ரீச் ஆனது.
இதை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் வந்த ஸ்ரீலீலா பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா, பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் கூட தனது சம்பளத்தை அவர் உயர்த்தியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் ஸ்ரீலீலா எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஸ்ரீலீலாவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நடன காணொளிகளுக்கு அவரது ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைக்கிறது.
சமீபத்திய தகவலின்படி, நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செய்யும் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும், ஸ்பான்ஸர் செய்யப்பட்ட பிராண்ட் விளம்பரத்திற்கும் சுமார் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாக மட்டுமே நடிகை ஸ்ரீலீலா மாதத்திற்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக வர்த்தக வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் அவர் சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்.





