--- --:--:-- --

பொய்யான செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு..!

7

ன்னியாகுமரியில் கொரொனாவால் இறந்தவரின் சடலத்தை சாலையில் வீசி சென்றனர் என்ற பொய்யான செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை சாலையில் வீசி சென்றிருப்பதாக பதிவிட்ட பேஸ்புக் செய்தி குமரி மாவட்டம் முழுவதும் பரவியது. செய்தி வைரலான நிலையில் ஸ்ரீவிஷ்ணு சாஸ்திரி தலைமையிலான காவல்துறையினர் உண்மை தன்மை அறிய தீவிர விசாரணையில் இறங்கினர்.

 

அது கோபாலன் என்பதும் அவர் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் இல்லாததால் உடலை மீட்டு காவல்துறையினர் சாலையோரம் சடலத்தை வைத்து அவருக்காக காத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில் சுரேஷ் பிரசாத் என்ற பேஸ்புக் ஐடி மூலம் இந்த செய்தியை அறிந்த காவல்துறையினர் தவறான செய்தியை பரப்பியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon