குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை..!
தெலுங்கானாவில் 6 வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் குடத்தை 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள சக்கரை பட்டினத்தை சேர்ந்த தம்பதியினரின் 6 வயது சிறுவன் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுவன் குடத்தை தலையில் வைத்து விளையாடி உள்ளான். ஆனால் எதிர்பாராவிதமாக சிறுவனின் தலை குடத்தில் மாட்டிக்கொண்டது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கட்டர் உதவியுடன் இரவு நேர போராட்டத்திற்கு பிறகு குடத்தை வெட்டி எடுத்து சிறுவனை மீட்டனர்.




