தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு..!
தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய திட்டம் 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளதால் 2025 டிசம்பரில் ஓய்வு பெற்றவர்கள் பாதிப்பு என விருப்ப ஓய்வு பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.






