அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது!
தமிழக வணிகத் துறை அமைச்சர் கே சி வீரமணிக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கூடியகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் கே சி வீரமணி அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களது நிலத்தை அபகரித்து உள்ளதாகவும் அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் மனுதாரர் புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லை என தெரியவந்ததாகவும் இதுபோன்ற மனுவை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது எனவும் வாதிட்டார்.
ஏற்கனவே அமைச்சருக்கு எதிராக மனுதாரர் தனிப்பட்ட முறையில் நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் விதமாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இலந்தரையன் உத்தரவிட்டுள்ளார்.






