மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு..!
மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மூக்கணாங்கயிறு போட்டு அனுமதிக்கும் மிருக வதை தடை சட்டம் கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் மூக்கணாங்கயிறு போட்டு விடுவதால் மாடு துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே மூக்கணாங்கயிறு போட்டு அனுமதிக்கும் வகை தடை சட்ட பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்ததோடு மத்திய மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.







