கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை..!
தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
நிலகொண்டா மாவட்டத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் அஜ்மீடா என்பவர் வீட்டுமனை விற்பனை தொடர்பான பத்திரப்பதிவுக்காக மதிய உணவுக்காக அருகில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கார் கண்ணாடிகளை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
உணவகத்தில் இருந்து திரும்பி வந்த பொழுது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பதறினார்.
உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் வந்ததன் பேரில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





