இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. யோகேஸ்வரன் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரும் பொள்ளாச்சி உடுமலை சாலையை கடக்க முயன்றனர்.
அப்பொழுது திடீரென அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் யோகேஸ்வரனும், ராஜசேகரும் தூக்கி வீசப்பட்டதில் சாலையோரத்தில் விழுந்தனர்.
படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





