ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடியவரின் வீடியோ வைரல்..!
தான்சானியா நாட்டை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஒருவர் ஓ சொல்றியா மாமா பாடலின் தெலுங்கு வெர்சனுக்கு நடனமாடிய வீடியோ உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
குறிப்பாக அந்த படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில் ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல் ட்ரெண்ட் ஆனது. தான்சானியாவை சேர்ந்த பிரபலம் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





