சென்னையில் ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பம்பர் பரிசா..!
சென்னையில் ஆன்லைனில் வாங்கிய பொருளுக்கு சொகுசு கார் பரிசீலிப்பதாக ஆசைக்காட்டி மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சோழிங்கநல்லூரை சேர்ந்த சுரேஷ் கடந்த மாதம் ஆன்லைனில் போர்வை ஒன்றை வாங்கியுள்ளார்.
20 நாட்களுக்கு பின் அவரது செல்போனில் சுஜித் என்ற பெயரில் பேசிய நபர் 350 ரூபாய்க்கு வாங்கிய போர்வைக்கு சுமார் 13 லட்சம் மதிப்பிலான கார் பம்பர் பரிசாக விழுந்து இருப்பதாக கூறியுள்ளார்.
அலங்கரிக்கப்பட்ட காரின் பணத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி அந்த நபர் காருக்கு வரி கட்ட 12 ஆயிரத்து 800 ரூபாய் வங்கி கணக்கில் உடனடியாகச் செலுத்துமாறு அவசரப்படுத்தியுள்ளார். சுரேஷ் செமஞ்செரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய எண்ணில் காவல்துறை பேச முற்பட்டபோது காவல்துறையினர் என தெரிந்து கொண்டு செல்போன் அணைக்கப்பட்டது. சுஜித் என்ற பெயரில் பேசிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.







